Home Stories Photos Videos Join
TRENDS
நடிகை கீர்த்தி பாண்டியனின் கிளாமர் ஸ்டில்ஸ்
ஸ்ரீலீலா அசத்தல் கிளிக்ஸ்
ஹைதராபாத் பெண் தொழிலதிபருடைய ரோல்ஸ்-ராய்ஸ் கார்!
வளர்ந்து வரும் கேரளா தொழிலதிபருடைய புது போர்ஷே கார்!
உலகின் பணக்கார பெண் ஃபிரான்ஷுவா பெட்டன் கோர்ட் னுடைய சொத்தின் மதிப்பு !

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு காவலர்களின் பிள்ளைகளான அண்ணன், தங்கை உலக சாதனை..

Brother sister world record : மயிலாதுறையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு காவலர்களின் பிள்ளைகளான அண்ணன், தங்கை 2024 முறை சிலம்பம், ஜிம்னாஸ்டிக் ரிங்கை சுற்றி உலக…

Brother sister world record : மயிலாதுறையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு காவலர்களின் பிள்ளைகளான அண்ணன், தங்கை 2024 முறை சிலம்பம், ஜிம்னாஸ்டிக் ரிங்கை சுற்றி உலக சாதனை படைத்தார்கள். பணியின் காரணமாக காவலர் வெளியூர் சென்ற நிலையில் வீடியோ காலில் சாதனைகளை ரசித்த போது கண்ணீருடன் தாய் பிள்ளைகளை உற்சாக படுத்திய சம்பவம் நெகிழ்ச்சி அடைய செய்தது.

Brother sister world record

2024 ஆம் ஆங்கில வருடத்தை வரவேற்று கொண்டாடும் விதத்தில் 2024 முறை அண்ணன் சிலம்பத்திலும்,தங்கை ஜிம்னாஸ்டிக் வளையத்தை உடலில் ஒரே நேரத்தில் இரண்டு சிறுவர்களும் உலக சாதனை படைத்து அசத்தினார்கள். மயிலாடுதுறையில் போலீசாக பணிபுரியும் மகாதானபுரத்தை சேர்ந்த ஹரிபாஸ்கர் – கார்குழலி தம்பதியின் மகன் 8 ஆம் வகுப்பு படிக்கிற அஸ்வினும் வயது 12, மகள் 4 ஆம் வகுப்பு படிக்கிற அஸ்விதா வயது 8, ஆகிய இருவரும் 2024 ஆம் புத்தாண்டை வரவேற்கும் விதமாக அஸ்வின் சிலம்பத்திலும், அஸ்விதா ஜிம்னாஸ்டிக் வளையம் சுற்றியும் உலக சாதனை படைக்கும் முயற்சிக்காக ஒரு மாதமாக பயிற்சி எடுத்து இன்று அவர்கள் உலக சாதனை படைத்தனர்.

Brother sister world record
Brother sister world record

Read Also : சுரைக்காயில் உள்ள மருத்துவ பயன்கள்..!

மயிலாதுறையில் தனியார் பள்ளியில் ஜாக்கி புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்டு அமைப்பு நடத்திய நிகழ்வில் சிலம்பத்தில் உள்ள அனைத்து முத்திரைகளையும் மாணவன் அஸ்வின் 2024 முறை சுற்றி கொண்டே சிலம்பத்தின் வரலாறுகளை கூறி சிலம்பம் சம்பந்தமான கேள்விகளுக்கு பதிலளித்து உலக சாதனை படைத்தார். இதே போல் மாணவி அஸ்விதா ஜிம்னாஸ்டிக் வளையத்தை உடலில் வயிறு, கால், கை, கழுத்து பகுதிகளில் 2024 முறை சுற்றி அவரும் உலக சாதனை படைத்தார்.

ஜாக்கி புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்டு அமைப்பு அண்ணன், தங்கை இருவரும் 33 நிமிடம் 24 செகண்டில் உலக சாதனையை பதிவு செய்தனர். முன்னதாக அச்சிறுவர்கள் சாதனை படைக்கும் நிகழ்வின்போது அவர்களது தந்தை பணியின் காரணமாக வராத சூழலால் தாய் கார்குழலி அவருக்கு உலக சாதனை நிகழ்ச்சியை வீடியோகாலில் காண்பித்தார்.அதை கணவர் கண்டு ரசித்தபோது கண்ணீர் மல்க, குழந்தைகளை தாய் உற்சாகப்படுத்தியது அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தொடர்ந்து அம்மாணவர்களுக்கு சாதனை படைத்ததற்கான சான்றிதழ்களை நிறுவனர் ஜாக்கப் ஞானசெல்வன் மற்றும் தமிழ் சங்க நிறுவனர் அழகுஜோதி, பவுல்ராஜ் அகாடமி தாளாளர் சிவா மெடல்களை வழங்கி அவர்களை கௌரவித்தனர்.

Read Also : Dashvanth Name Meaning | தஷ்வந்த் பெயரின் அர்த்தம்

புதியது

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.

இப்போதே படிக்க