Home Stories Photos Videos Join
TRENDS
நடிகை கீர்த்தி பாண்டியனின் கிளாமர் ஸ்டில்ஸ்
ஸ்ரீலீலா அசத்தல் கிளிக்ஸ்
ஹைதராபாத் பெண் தொழிலதிபருடைய ரோல்ஸ்-ராய்ஸ் கார்!
வளர்ந்து வரும் கேரளா தொழிலதிபருடைய புது போர்ஷே கார்!
உலகின் பணக்கார பெண் ஃபிரான்ஷுவா பெட்டன் கோர்ட் னுடைய சொத்தின் மதிப்பு !

கீழ்வேளூர் அஞ்சு வட்டத்தம்மன் ஆலயத்தில் 1008 லிட்டர் பால்குட ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

Anju Vattathamman Temple Kilivelur : மாசி பௌர்ணமி தினத்தை முன்னிட்டு கீழ்வேளூர் அஞ்சு வட்டத்தம்மன் ஆலயத்தில் 1008 லிட்டர் பால்குட ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு…

Anju Vattathamman Temple Kilivelur : மாசி பௌர்ணமி தினத்தை முன்னிட்டு கீழ்வேளூர் அஞ்சு வட்டத்தம்மன் ஆலயத்தில் 1008 லிட்டர் பால்குட ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

Anju Vattathamman Temple Kilivelur
Anju Vattathamman Temple Kilivelur

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் உள்ள பழமை வாய்ந்த அருள்மிகு சுந்தர குஜலாம்பிகை உடனுறை அருள்மிகு அட்சயலிங்க சுவாமி கோயிலில் மாசி பௌர்ணமியை முன்னிட்டு கோவிலில் அமைந்துள்ள அஞ்சுவட்டத்தம்மனுக்கு 1008 லிட்டர் பால் கொண்டு பாலபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக ஆலயத்தில் அமைந்துள்ள லெட்சுமி வினாயகர் சன்னதியில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை‌‌, கணபதிஹோமம், பூர்ணாஹுதி மற்றும் லெட்சுமி வினாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது

இதையும் படிங்க : தலைமுடி வளர தரமான ஐந்து யோகாசனங்கள்! செய்து பாருங்க!

அதனைத் தொடர்ந்து கோவில் சன்னதியில் இருந்து விரதம் இருந்த 100 க்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்களும் பால் குடங்களை சுமந்து 4 முக்கிய வீதிகள் வழியாக வந்து ஆலயத்தை வந்தடைந்தனர். பின்னர் பக்தர்கள் எடுத்து வந்த 1008 லிட்டர் பாலை கொண்டு அஞ்சுவட்டத்தம்மனுக்கு மஹா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க : பாட்டுக்கு வேறு பெயர்கள் | Other Names of Pattu in Tamil

புதியது

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.

இப்போதே படிக்க