Home Stories Photos Videos Join
TRENDS
நடிகை கீர்த்தி பாண்டியனின் கிளாமர் ஸ்டில்ஸ்
ஸ்ரீலீலா அசத்தல் கிளிக்ஸ்
ஹைதராபாத் பெண் தொழிலதிபருடைய ரோல்ஸ்-ராய்ஸ் கார்!
வளர்ந்து வரும் கேரளா தொழிலதிபருடைய புது போர்ஷே கார்!
உலகின் பணக்கார பெண் ஃபிரான்ஷுவா பெட்டன் கோர்ட் னுடைய சொத்தின் மதிப்பு !

10, 12ம் மாணவ மாணவிகள் பொது தேர்வு எழுதுவதற்கு ஆசிர்வாதம் வாங்கிய நிகழ்ச்சி

students blessed to write exam : 10 ம் வகுப்பு மற்றும்12 ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் பெற்றோர்களுக்கு பாத பூஜை…

students blessed to write exam : 10 ம் வகுப்பு மற்றும்12 ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்து ஆசிரியர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிய நிகழ்ச்சி தருமபுரம் ஆதீனம் மடாதிபதி முன்னிலையில் நடைபெற்றது:-

students blessed to write exam
students blessed to write exam

மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரத்தில் தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான ஸ்ரீ குருஞானசம்பந்தர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 10 ம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகள் பொது தேர்வு எழுதுவதற்கு முன்னதாக மாதா பிதா குரு தெய்வம் ஆகியோர்களிடம் ஆசிர்வாதங்களை பெறும் வகையில் 16/02/2024 ல் ஆசீர்வாத திருநாள் கொண்டாடப்பட்டது.

இதனை முன்னிட்டு 250 பள்ளி மாணவ மாணவிகள் தங்களின் பெற்றோருக்கு பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பாத பூஜை செய்தனர். , குருக்கள் மந்திரங்களை சொல்லச் சொல்ல மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோருக்கு பாதங்களில் மலர்களை வைத்து பூஜையை மேற்கொண்டனர். அதனை அடுத்து வரிசையாக நின்று அனைத்து ஆசிரியர்களிடமும் ஆசிர்வாதம் பெற்றனர்.

இதையும் படிங்க : இந்தியாவில் தடை செய்யப்பட்ட இடங்கள் எது தெரியுமா?

வரிசையாக வந்து ஆசீர்வாதம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்கள் மலர்கள் மற்றும் அட்சதைகளை தூவி ஆசீர்வாதம் செய்தனர். அதனை தொடர்ந்து மாணவ மாணவிகள் தெய்வத்திற்கு மரியாதை செலுத்தினர். மாணவ மாணவிகளுக்கு பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட பேனா பென்சில்கள் வழங்கப்பட்டது. அப்போது பாத பூஜை செய்த மாணவர்களை பெற்றோர்கள் நெகிழ்ச்சியுடன் ஆசீர்வாதம் செய்தார்கள்.

நிகழ்ச்சியில் தர்மபுரம் ஆதின குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் கலந்து கொண்டு பூஜை வேலை செய்து மாணவ மாணவிகளுக்கு ஆசீர்வாதம் வழங்கினார்.

இதையும் படிங்க : கொய்யாபழத்தை தினமும் சாப்டுவதால் கிடைக்கும் நன்மைகள்!

புதியது

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.

இப்போதே படிக்க