Home Stories Photos Videos Join
TRENDS
நடிகை கீர்த்தி பாண்டியனின் கிளாமர் ஸ்டில்ஸ்
ஸ்ரீலீலா அசத்தல் கிளிக்ஸ்
ஹைதராபாத் பெண் தொழிலதிபருடைய ரோல்ஸ்-ராய்ஸ் கார்!
வளர்ந்து வரும் கேரளா தொழிலதிபருடைய புது போர்ஷே கார்!
உலகின் பணக்கார பெண் ஃபிரான்ஷுவா பெட்டன் கோர்ட் னுடைய சொத்தின் மதிப்பு !

மயிலாடுதுறையில் மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் சாலை மறியல்

Road blockade by trade unionists : மயிலாடுதுறையில் மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் உட்பட பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்…

Road blockade by trade unionists : மயிலாடுதுறையில் மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் உட்பட பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் , தொடர்ந்து போலீசார் மறியலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர்

Road blockade by trade unionists
Road blockade by trade unionists

மத்திய அரசை கண்டித்து 16/02/2024 ல் நாடு தழுவியே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் விவசாய அமைப்புகள் ஒன்றிணைந்து சாலை மறியல் மற்றும் கடையடைப்பு போன்ற பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகில் ஏராளமானோர் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் பிரதான சாலையில் பல்வேறு தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பினர் மற்றும் விவசாய அமைப்புகள் ஒன்றிணைந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க : உங்கள் உணவில் முருங்கை சேர்க்க 5 வகையான வழிகள்.!

மேலும் படித்த இளைஞர்களுக்கு தகுதிக்கேற்ற வேலையை உருவாக்கிட வேண்டும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் , விவசாய விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் , 100 நாள் வேலைத்திட்ட நாட்களை 200 நாட்களாக்கி தினக்கூலியாக ரூபாய் 600 வழங்கிட வேண்டும் , பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயும் மீதான கலால் வரியை நீக்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

மேலும் நகரின் முக்கிய பகுதியில் மறியல் போராட்டம் நடைபெற்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து காவல்துறையினரால் போக்குவரத்து மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டது. தொடர்ந்து போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர்.

இதையும் படிங்க : மயிலாடுதுறையில் 18 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை

புதியது

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.

இப்போதே படிக்க