Pongal Festival in Mayiladuthurai Municipality : மயிலாடுதுறை நகராட்சியில் பொங்கலிட்டு கும்மி அடித்து கூட்டாஞ்சோறு ஆக்கிய பெண் ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் படையல் வைத்து உற்சாகம்:-
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை 15/01/2024 அன்று கொண்டாடப்பட கூடிய நிலையில் பல்வேறு அரசு அலுவலகங்களிலும் பொங்கல் பண்டிகைகள் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது
Pongal Festival in Mayiladuthurai Municipality

அதன்படி மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் பெண் ஊழியர்கள் வாசலில் கோலமிட்டு கல் அடுப்பில் பொங்கல் பானையை வைத்து, கரும்பு, இஞ்சி மற்றும் மஞ்சள் கொத்து இவற்றுடன் பச்சரிசி, பால் பொங்கல் பொங்கி உற்சாகமாக கொண்டாடினர் முன்னதாக சமையலுக்கு தேவைபடும் உணவுகளை நடுவில் வைத்து பெண் ஊழியர்கள் கும்மியடித்து கூட்டாஞ்சோறு சமைக்கும் நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.
Read Also : பொங்கல் வாழ்த்து 2024 | Pongal Wishes 2024
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி சூரியனுக்கு படையல் இட்டு விழாவை துவங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மயிலாடுதுறை நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு நகராட்சி சார்பில் சிறப்பு பொங்கல் தொகுப்பினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.
இப்போதே படிக்க


