300 people participated picketing : திமுக தேர்தல் வாக்குறுதிகள் தெரிவித்த பழைய பென்ஷன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து ஜாக்டோ ஜியோ சார்பில் 300க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்துவது, முடக்கப்பட்ட அகவிலை தொகை சரண்டர், விடுப்பு தொகை, ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும்,ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை உடனடியாக களைய வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக திமுக கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலின் போது தேர்தல் வாக்குறுதியாக அளித்திருந்தது.
மூன்று ஆண்டுகள் கடந்த பின்பும் தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்று கூறி ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் கூட்டு போராட்டக் குழுவான ஜாக்டோ ஜியோ சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன இந்நிலையில் இன்று மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது… அதன்படி மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ சார்பில் பல்வேறு அரசு ஊழியர்கள் ஆசிரியர் சங்கங்கள் பங்கேற்று கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
Read Also : ஆதார் பரிவர்த்தனை நடைமுறைச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய தொழிலாளர் சங்கத்தினர் போராட்டம்
இதன் காரணமாக மயிலாடுதுறை கச்சேரி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டது போராட்டத்தில் பங்கேற்ற ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாக எச்சரிக்கை விடுத்தனர் ஜாக்டோ ஜியோ போராட்டம் காரணமாக பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது 300-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்று தங்கள் கண்டன கோஷங்களையும் எழுப்பியபடி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.
இப்போதே படிக்க


