Home Stories Photos Videos Join
TRENDS
நடிகை கீர்த்தி பாண்டியனின் கிளாமர் ஸ்டில்ஸ்
ஸ்ரீலீலா அசத்தல் கிளிக்ஸ்
ஹைதராபாத் பெண் தொழிலதிபருடைய ரோல்ஸ்-ராய்ஸ் கார்!
வளர்ந்து வரும் கேரளா தொழிலதிபருடைய புது போர்ஷே கார்!
உலகின் பணக்கார பெண் ஃபிரான்ஷுவா பெட்டன் கோர்ட் னுடைய சொத்தின் மதிப்பு !

மல்லியம் பகுதியில் ரூ. 2 கோடியே 86 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டு விழா

New bridge at Malliam area : மல்லியம் பகுதியில் கிராமப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 2 கோடியே 86 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம்…

New bridge at Malliam area : மல்லியம் பகுதியில் கிராமப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 2 கோடியே 86 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டு விழா.எம் எல் ஏ ராஜகுமார் அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தார்:-

New bridge at Malliam area
New bridge at Malliam area

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்து மல்லியம்,மற்றும் வானாதிராஜபுரத்தை இணைக்கும் பகுதியான காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் அமைந்து உள்ளது.வானாதிராஜபுரம், கடலங்குடி, மூவலூர், காளி, அஞ்சாறுவர்த்தாலை, திருமங்கலம்,உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடிய முக்கிய பிரதான இணைப்பு பாலமாக இந்த பாலம் அமைந்துள்ளது..இந்தப் பாலம் பல ஆண்டுகளாக பழுதடைந்து காணப்பட்டதால் இதனை இடித்து புதிய பாலம் கட்டித் தர அப்பகுதி மக்கள் மயிலாடுதுறை எம் எல் ஏ ராஜகுமாரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

Read Also : ஏன் எல்லா சுபகாரியங்களுக்கு வெற்றிலை பாக்கு வைக்கிறார்கள் காரணம் தெரியுமா..?

கோரிக்கை ஏற்ற எம் எல் ஏ கிராமப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2 கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய பாலம் கட்டித் தர 2/02/2024 ல் பூமி பூஜை நடைபெற்றது. இந்த பூமி பூஜையை மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராஜ்குமார் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் திமுக பொறுப்பாளர் மூவலூர் மூர்த்தி, குருசேவ் ஊராட்சி மன்ற தலைவர், மற்றும் திமுக, காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

புதியது

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.

இப்போதே படிக்க