Home Stories Photos Videos Join
TRENDS
நடிகை கீர்த்தி பாண்டியனின் கிளாமர் ஸ்டில்ஸ்
ஸ்ரீலீலா அசத்தல் கிளிக்ஸ்
ஹைதராபாத் பெண் தொழிலதிபருடைய ரோல்ஸ்-ராய்ஸ் கார்!
வளர்ந்து வரும் கேரளா தொழிலதிபருடைய புது போர்ஷே கார்!
உலகின் பணக்கார பெண் ஃபிரான்ஷுவா பெட்டன் கோர்ட் னுடைய சொத்தின் மதிப்பு !

ஒவ்வொரு மாணவரும் முழுமையாக தங்களின் மீது நம்பிக்கை வைத்தால் எந்த உயரத்திற்கு வேண்டுமானாலும் செல்லலாம் – மகாபாரதி

Mayiladuthurai Collector speech : மயிலாடுதுறை தனியார் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி…

Mayiladuthurai Collector speech : மயிலாடுதுறை தனியார் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி அறிவுரை கூறினார். ஒவ்வொரு மாணவரும் முழுமையாக தங்களின் மீது நம்பிக்கை வைத்தால் எந்த உயரத்திற்கு வேண்டுமானாலும் செல்லலாம் என பேச்சு::-

Mayiladuthurai Collector speech

Mayiladuthurai Collector speech
Mayiladuthurai Collector speech

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தனியார் (சில்வர் ஜூப்ளி மெட்ரிகுலேஷன்) பள்ளி கடந்த 9 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. பள்ளியின் 9 ஆண்டு விழா நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

மாவட்ட ஆட்சியர் பேசும் போது மாணவப் பருவம் என்பது நல்ல பருவம் ஒவ்வொரு மாணவரும் தங்களின் மீது நம்பிக்கை வைத்தால் சாதிக்க முடியும், மிகச் சிறப்பாக படிக்க முடியும் உங்களால் எந்த உயரத்திற்கும் செல்ல முடியும் என்று கூறினார். வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் இழக்கலாம் நம்பிக்கையை மட்டும் இழக்கக்கூடாது என்றும் நம்பிக்கையை இழந்தால் வாழ்க்கையை இழக்க நேரிடும் எனவும் , உங்களுக்கு பிடிக்கக்கூடிய விஷயத்தில் நீங்கள் சாதிக்க வேண்டும் பிடிக்காத விஷயத்தில் சாதிக்க இயலாது. ஏ ஆர் ரகுமான் 10 ஆம் வகுப்பிற்கு மேல் பள்ளிக்கு செல்லவில்லை இருந்தாலும் அவருக்கு பிடித்த விஷயத்தை செய்து அவர் இன்று சாதனை மனிதராக விளங்கி வருகிறார்.

Read Also : மயிலாடுதுறையில் இரண்டாவது புத்தகத் திருவிழா தொடக்கம்

கிரிக்கெட் வீரர் டென்டுல்கர் படிப்பைகாட்டிலும் விளையாட்டில் அதிக ஆர்வம் செலுத்தினார் அதனால்தான் விளையாட்டில் அவர் ஒரு ஜாம்பவனாக விளங்கினார். ஆகவே நமக்கு பிடித்த விஷயத்தை செய்து சாதனை படைக்க வேண்டும், இந்த உலகத்தில் சாதனை படைப்பதற்கு பல்வேறு விஷயங்களுள்ளது. நான் முதல்வன் திட்டத்தில் பல்வேறு துறையில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அதுமட்டுமின்றி ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், டெக்னாலஜி கல் இன்வென்ஷன் நிறைய வந்துள்ளது மொபைல் போன் மற்றும் கம்ப்யூட்டரில் உலகம் முழுவதையும் அறிந்து கொள்ளும் அளவிற்கு வசதியுள்ளது படிப்பதற்கு நிறைய உள்ளது டைவர்ஷன் ஆவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளது எனவே இந்த வயசுல எப்படி டெடிகேட்டடா இருக்கிறோம். எதை சாதிக்க நினைக்கிறோம் என்பதை நினைத்து உழைத்தால் நிச்சயம் சாதிக்க முடியும் என்று கூறினார்.

புதியது

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.

இப்போதே படிக்க