Home Stories Photos Videos Join
TRENDS
நடிகை கீர்த்தி பாண்டியனின் கிளாமர் ஸ்டில்ஸ்
ஸ்ரீலீலா அசத்தல் கிளிக்ஸ்
ஹைதராபாத் பெண் தொழிலதிபருடைய ரோல்ஸ்-ராய்ஸ் கார்!
வளர்ந்து வரும் கேரளா தொழிலதிபருடைய புது போர்ஷே கார்!
உலகின் பணக்கார பெண் ஃபிரான்ஷுவா பெட்டன் கோர்ட் னுடைய சொத்தின் மதிப்பு !

சீதை சிகரெட் பிடித்தபடி நாடகம்; பேராசிரியர் மற்றும் மாணவர்கள் கைது

Drama with Sita smoking a cigarette : மராட்டியத்தின் புனே நகரத்தில் அமைந்துள்ள புனே பல்கலைக்கழகத்தில் ராமலீலை அடிப்படையில் நாடகம் நடத்தப்பட்டது. இதில், மத உணர்வுகளை…

Drama with Sita smoking a cigarette : மராட்டியத்தின் புனே நகரத்தில் அமைந்துள்ள புனே பல்கலைக்கழகத்தில் ராமலீலை அடிப்படையில் நாடகம் நடத்தப்பட்டது. இதில், மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் சில விசயங்கள் நடந்துள்ளன. எதிர்ப்புக்குரிய காட்சிகளும் மற்றும் வசனங்களும் இடம் பெற்றுள்ளன.

Drama with Sita smoking a cigarette
Drama with Sita smoking a cigarette

இதற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்போடு தொடர்புடைய அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.) மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஏ.பி.வி.பி. மாணவர்களுக்கும், புனே பல்கலைக்கழகத்தின் லலித் கலா கேந்திரா மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதுபற்றி ஏ.பி.வி.பி. செயல்பாட்டாளரான ஹர்ஷவர்தன் ஹர்புடே புகார் அளித்ததில் பேரில் வழக்கு ஒன்று பதிவாகி உள்ளது. இதில், லலித் கலா கேந்திரா துறையின் தலைவர் பிரவீன் போலே, மாணவர்களான பவேஷ் பாட்டீல், ஜெய் பட்னாகர், யாஷ் சிக்லே, பிரதமேஷ் சாவந்த் மற்றும் ரிஷிகேஷ் தல்வி ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Read Also : சங்கி என்பதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?

இது பற்றிய எப்.ஐ.ஆர். பதிவில், ராமலீலையில் சீதை வேடமிட்டு நடித்த ஆண் கலைஞர் ஒருவர் சிகரெட் குடிப்பது போல காட்சியளித்தும், ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தியும் இருக்கிறார்.

இதற்கு ஏ.பி.வி.பி. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து, இந்த நாடகத்தை நிறுத்த வேண்டும் என்று கூறி கோஷம் போட்டிருக்கின்றனர். இதனால், கலைஞர்களுக்கும் அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. உறுப்பினர்களை அவர்கள் தாக்கியுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதியது

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.

இப்போதே படிக்க