isak munda youtube : தினக்கூலிக்கு வேலை செய்து குடும்பத்தை எப்படி கவனித்துக் கொள்வது என்று நினைத்தவர் Youtube மூலம் லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதித்து வருகிறார்.

இந்திய மாநிலமான ஒடிசாவைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான ஐசக் முண்டா (isak munda). இவர் தினமும் கூலி வேலை செய்து ரூ.250 சம்பாதித்தார். அப்போது, கொரோனா காலம் ஏற்பட்ட காரணத்தால் தனது கூலி வேலையையும் திடீரென இழந்துள்ளார்.
அந்த நேரத்தில் Youtube -ல் வீடியோ போட்டு பணம் ஈட்டலாம் என்று கேள்விபட்டுள்ளார். அதனை முயற்சி செய்து பார்க்கலாம் என isak munda நினைத்துள்ளார். பின்னர் எதார்த்தமாக பாரம்பரியமான ஒடியா உணவு வகைகளை வீடியோக்களாக உருவாக்கி Youtube -ல் பதிவேற்றம் செய்துள்ளார்.
தக்காளி, பருப்பு, கீரைகள் மற்றும் மிளகாயுடன் சாதம் சாப்பிடுவதை வீடியோவாகதயாரித்து பதிவேற்றம் செய்தார் ஆனால், இந்த வீடியோ எதிர்பார்த்த அளவுவில் சந்தாதாரர்கள் வரவில்லை.
இதனை அடுத்து, ஒடிசாவில் பிரபலமான புளித்த அரிசி உணவு வகையான பாசி பகலாவை சாப்பிட்ட வீடியோ ஒன்று வைரலாகியது. அந்த வீடியோவின் மூலம் 20,000 சந்தாதாரர்களைப் பெற்றார்.
இதையும் படிங்க : பாட்டுக்கு வேறு பெயர்கள் | Other Names of Pattu in Tamil
இவருடைய வீடியோக்கள் அமெரிக்கா, மங்கோலியா, பிரேசில் ஆகிய நாடுகளில் சந்தாதாரர்கள் பார்ப்பது அதிகமாக இருந்தது. மன்கி பாத்தில் பிரதமர் நரேந்திர மோடி இவரை பாராட்டியுள்ளார்.
தனது வீடியோக்களை உருவாக்க வேண்டியதால் செகண்ட் ஹேண்ட் கார் மற்றும் லேப்டாப் வாங்கியுள்ளார். தற்போது, இவரது வீடியோக்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதால் மூன்று லட்சம் ரூபாய் ஒரு மாதத்திற்கு சம்பாதித்து வருகிறார்.மக்களும் இவருடைய வீடியோவை ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க : முட்டை இல்லாமல் ஆம்லெட் செய்வது எப்படி?
உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.
இப்போதே படிக்க


