Home Stories Photos Videos Join
TRENDS
நடிகை கீர்த்தி பாண்டியனின் கிளாமர் ஸ்டில்ஸ்
ஸ்ரீலீலா அசத்தல் கிளிக்ஸ்
ஹைதராபாத் பெண் தொழிலதிபருடைய ரோல்ஸ்-ராய்ஸ் கார்!
வளர்ந்து வரும் கேரளா தொழிலதிபருடைய புது போர்ஷே கார்!
உலகின் பணக்கார பெண் ஃபிரான்ஷுவா பெட்டன் கோர்ட் னுடைய சொத்தின் மதிப்பு !

மூன்று மணிநேரம் இடைவிடாது சிலம்பம் சுற்றி போதை இல்லா சமுதாய விழிப்புணர்வு உலக சாதனை

silambam non-stop for three hours : மாணவர்கள் மயிலாடுதுறை அருகில் போதை பொருளுக்கு எதிராக இடைவிடாது சிலம்பம் 3 மணி நேரம் சுற்றி போதை இல்லா…

silambam non-stop for three hours : மாணவர்கள் மயிலாடுதுறை அருகில் போதை பொருளுக்கு எதிராக இடைவிடாது சிலம்பம் 3 மணி நேரம் சுற்றி போதை இல்லா சமுதாய விழிப்புணர்வு உலக சாதனை படைத்தனர். மாணவர்கள் மதுவிலக்கு அமலாக்க துறை போலீசாருடன் போதை பொருளுக்கு எதிராக உறுதிமொழியேற்றனர். மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம் சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்

silambam non-stop for three hours
silambam non-stop for three hours

silambam non-stop for three hours

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மூவலூர் மகாதானபுரத்தில் உலக சாதனை நிகழ்வாக நோபல் புக் ஆப் ரெக்கார்ட் மற்றும் விக்ரம் வீர தமிழர் சிலம்பாட்ட கழகம் சார்பில் போதை இல்லா சமுதாய விழிப்புணர்வு மாணவ மாணவிகள் 3 மணி நேரம் இடைவிடாமல் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர்.

நோபல் புக் ஆப் ரெக்கார்ட் நடுவர் விக்ரம் முன்னிலையில் 6 வயது முதல் இருபது வயது வரை உள்ள முப்பத்து நான்கு மாணவ மாணவிகள் பங்கேற்று சிலம்பத்தில் உள்ள சலாம், உள்வாரல், வெளிவாரல், போத்து, தலைசுத்து, ஒற்றை வீச்சு, இரட்டை வீச்சு, அடிவரிசை,கமுட்டு போன்ற முறைகளை 1000 திற்கும் மேற்பட்ட சுற்றுகளை தொடர்ச்சியாக 3 மணி நேரம் இடைவிடாமல் சிலம்பம் சுற்றினர்.

இதையும் படிங்க : சுவைகொண்ட வெண்டை காய் புளி கொழம்பு தயார் செய்வது எவ்வாறு ?அதை செய்து பார்க்கலாம் வாருங்கள் …

காவல்துறை சார்பில் போதைப் பொருளுக்கு எதிராக ஒளிபரப்பப்பட்ட ஆடியோ பாடலுக்கு தகுந்தவாறு சிலம்பம் சுற்றியது பார்வையாளர்களிடம் மிகுந்த பாராட்டை பெற்றது. இதில் பொதுமக்கள் காவல்துறையினர், பெற்றொர்கள், ஏராளமானோர் பங்கேற்று சிலம்பம் சுற்றிய மாணவர்களை ஊக்கப்படுத்தினர். உலக சாதனையாக போதைக்கு எதிரான நோபல் புக் ஆப் ரெக்கார்ட் விழிப்புணர்வு சிலம்பாட்ட நிகழ்வை பதிவு செய்தது.

அதனை தொடர்ந்து மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் அன்னை அபிராமி தலைமையில் மாணவர்கள் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். பின்னர் மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பதக்கங்கள் கேடயம் சான்றிதழ்களை வழங்கி பாராட்டுதலையும் தெரிவித்தார்.

இதையும் படிங்க : திடீர் பணவரவிற்காக வெற்றிலையுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து வையுங்க போதும்..!

புதியது

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.

இப்போதே படிக்க