Home Stories Photos Videos Join
TRENDS
நடிகை கீர்த்தி பாண்டியனின் கிளாமர் ஸ்டில்ஸ்
ஸ்ரீலீலா அசத்தல் கிளிக்ஸ்
ஹைதராபாத் பெண் தொழிலதிபருடைய ரோல்ஸ்-ராய்ஸ் கார்!
வளர்ந்து வரும் கேரளா தொழிலதிபருடைய புது போர்ஷே கார்!
உலகின் பணக்கார பெண் ஃபிரான்ஷுவா பெட்டன் கோர்ட் னுடைய சொத்தின் மதிப்பு !

மயிலாடுதுறை அருகே அதிமுக சார்பில் வைக்கப்பட்ட பேனர் அகற்றப்பட்டதால் பரபரப்பு

Mayiladuthurai Admk banner removed : மயிலாடுதுறை அருகே போலீசாரால் அதிமுக சார்பில் வைக்கப்பட்ட பேனர் அகற்றப்பட்டதால் பரபரப்பு, அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் போலீசார்…

Mayiladuthurai Admk banner removed : மயிலாடுதுறை அருகே போலீசாரால் அதிமுக சார்பில் வைக்கப்பட்ட பேனர் அகற்றப்பட்டதால் பரபரப்பு, அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் பேனரை வைத்தவுடன் கலைந்து சென்றனர்.

Mayiladuthurai Admk banner removed
Mayiladuthurai Admk banner removed

மயிலாடுதுறை அருகே செம்பனார் கோயில் கீழ முக்கூட்டு என்ற பகுதியில் சாலையின் ஓரமாக அதிமுக சார்பில் திருமண பேனர் வைக்கப்பட்டிருந்தது. இதனிடையே மறு தினமே பேனர் கிழிக்கப்பட்டு அருகே தூக்கி வீசப்பட்டிருந்தது. இதனால் அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அதே பகுதியில் அம்மா பிறந்தநாள் தொடர்பான பேனர் அதிமுக சார்பில் 19/02/2024 ல் வைக்கப்பட்டுள்ளது.

இந்த பேனர் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ளதாக கூறி காவல் துறையினர் மறுநாள் பேனரை அவிழ்த்து கீழே இறக்கி வைத்தனர். இதனால் ஆத்திரமான அதிமுகவினர் மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் முக்கூட்டு பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடத்த திரண்டு சென்றனர். தகவல் அறிந்து அங்கு வந்த செம்பனார்கோவில் போலீசார் மாவட்ட செயலாளர் பவுன்ராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையும் படிங்க : குத்தாலம் மஹா மாரியம்மன் கோயிலில் பால்குட திருவிழா

பேச்சுவார்த்தைக்கு பின்னர் அதே பகுதியில் பேனர் வைக்கப்பட்ட நிலையில் நிர்வாகிகள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து காவல்துறையில் கேட்டபோது அனைத்து கட்சியினருக்கும் பேனர் வைப்பதற்கு விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் , நிகழ்ச்சி நடப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு அனுமதி பெற்ற பிறகு தான் பேனர் வைக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் , அதிமுகவினர் உரிய அனுமதி பெறாததால் அப்பகுதியில் இருந்து காவல் துறையால் பேனர் அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எங்கு பேனர் வைப்பதாக இருந்தாலும் உரிய அனுமதி பெற்றுகொண்டு பேனர் வைக்க வேண்டும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : சுவையாக எலுமிச்சை சாதம் செய்வது எப்படி ?

புதியது

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.

இப்போதே படிக்க