HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

செய்தி

புதிய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பார்வையிட்டார்

New Mayiladuthurai Collector Office

New Mayiladuthurai Collector Office : மயிலாடுதுறையில் திறப்பு விழா நடைபெற உள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பார்வையிட்டார் :-

தமிழகத்தில் மயிலாடுதுறை மாவட்டம் 38 வது மாவட்டமாக உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் மயிலாடுதுறை அருகே பால்பண்ணை பகுதியில் ரூபாய் 114 கோடி திட்ட மதிப்பீட்டில் மாவட்டத்திற்கு என புதிய ஆட்சியர் அலுவலகம் தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

New Mayiladuthurai Collector Office
New Mayiladuthurai Collector Office

New Mayiladuthurai Collector Office

ஏழு மாடி கட்டிடமாக கட்டப்பட்டுள்ள இக்கட்டிடத்தின் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் 26/02/2024 ல் நேரில் சென்று கட்டிடத்தை பார்வையிட்டார். மேலும் நிறைவடைந்த பணிகள் குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் எம்பி இராமலிங்கம் , சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா முருகன் , துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்றது.

இதையும் படிங்க : பால் பொங்கி வழியாமல் இருக்க இதை செய்து பாருங்க !

தொடர்ந்து அக்கூட்டத்தில் ஆட்சியர் அலுவலக திறப்பு விழாவை பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது. மேலும் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வருகின்ற மார்ச் நான்காம் தேதி ஆட்சியர் அலுவலக திறப்பு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக இன்னும் தேதி உறுதி படுத்தப்படவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : குத்தாலம் அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் ஆலய திருக்கல்யாணம் உற்சவம்

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்