Home Stories Photos Videos Join
TRENDS
நடிகை கீர்த்தி பாண்டியனின் கிளாமர் ஸ்டில்ஸ்
ஸ்ரீலீலா அசத்தல் கிளிக்ஸ்
ஹைதராபாத் பெண் தொழிலதிபருடைய ரோல்ஸ்-ராய்ஸ் கார்!
வளர்ந்து வரும் கேரளா தொழிலதிபருடைய புது போர்ஷே கார்!
உலகின் பணக்கார பெண் ஃபிரான்ஷுவா பெட்டன் கோர்ட் னுடைய சொத்தின் மதிப்பு !

திருவிடைக்கழியில் ஸ்ரீ தில்லை காளியம்மன் ஆலய கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது

Sri Thillai Kaliamman Kumbabhishekam : தரங்கம்பாடி அருகே திருவிடைக்கழியில் ஸ்ரீ தில்லை காளியம்மன் ஆலய கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி…

Sri Thillai Kaliamman Kumbabhishekam : தரங்கம்பாடி அருகே திருவிடைக்கழியில் ஸ்ரீ தில்லை காளியம்மன் ஆலய கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Sri Thillai Kaliamman Kumbabhishekam
Sri Thillai Kaliamman Kumbabhishekam

Sri Thillai Kaliamman Kumbabhishekam

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருவிடைக்கழி ஊராட்சி வடக்கு தெருவில் ஸ்ரீ தில்லை காளியம்மன் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில் கும்பாபிஷேகம் செய்வதற்காக திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு ஆலயத்தின் முன் யாகசாலை அமைத்து புனித நீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு 25/02/2024 ல் முதல் காலை யாகசாலை பூஜை தொடங்கியது.

இதையும் படிங்க : பால் பொங்கி வழியாமல் இருக்க இதை செய்து பாருங்க !

தொடர்ந்து 26/02/2024 ல் இரண்டாம் கால யாகசாலை பூஜை முடிவடைந்து மகா பூர்ணாகுதி
செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது பின் யாகசாலையில் இருந்து கடங்கல் புறப்பாடு செய்யப்பட்டு ஆலயத்தை சுற்றி வலம் வந்து கோபுர கலசத்தை அடைந்தது. கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் மிக சிறப்பாக நடைபெற்றது.

இந்த கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஸ்ரீ தில்லை காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர் மேலும் திரளான பெண்கள் பக்தி பிரசவத்தில் சாமி ஆடினர்.

இதையும் படிங்க : பாட்டுக்கு வேறு பெயர்கள் | Other Names of Pattu in Tamil

புதியது

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.

இப்போதே படிக்க