Alternative parties joined the DMK : நாகையில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி திமுகவில் 50க்கும் மேற்பட்டோர் இணைந்து கொண்டனர்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணையும் நிகழ்ச்சி நாகப்பட்டினம் மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது இந்நிகழ்விற்கு நாகப்பட்டினம் மாவட்ட திமுக செயலாளரும் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் என். கௌதமன் தலைமையில் மறைந்த முன்னாள் திமுக பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் நகரமன்ற உறுப்பினருமான சச்சா முபாரக் மனைவி நூர்ஜஹான் முன்னிலையில் 50க்கும் மேற்பட்டோர் அதிமுக மற்றும் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்து கொண்டனர்.
இதையும் படிங்க : நடிகை அமலா அக்கினேனியின் டாப் 10 தமிழ் படங்கள்!
தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்தில் புதிதாக இணைந்த உறுப்பினர்களை மாவட்ட அவை தலைவர் செல்வம், நாகை நகர செயலாளரும் நகர மன்ற தலைவருமான இரா.மாரிமுத்து, தலைமை செயற்குழு உறுப்பினரும் கீழ்வேளூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜன்உள்ளிட்டவர்கள் புதிய உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.
இதையும் படிங்க : நாகப்பட்டினத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா
உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.
இப்போதே படிக்க


