Home Stories Photos Videos Join
TRENDS
நடிகை கீர்த்தி பாண்டியனின் கிளாமர் ஸ்டில்ஸ்
ஸ்ரீலீலா அசத்தல் கிளிக்ஸ்
ஹைதராபாத் பெண் தொழிலதிபருடைய ரோல்ஸ்-ராய்ஸ் கார்!
வளர்ந்து வரும் கேரளா தொழிலதிபருடைய புது போர்ஷே கார்!
உலகின் பணக்கார பெண் ஃபிரான்ஷுவா பெட்டன் கோர்ட் னுடைய சொத்தின் மதிப்பு !

பிளாஸ்டிக் குப்பைகளை கொட்ட வந்த வாகனங்களை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டம்

Plastic Waste Vechicle : மயிலாடுதுறை அருகே 35 அடி ஆழ பள்ளத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் கலந்த மணல்களை கொட்டி தூர்த்து பிளாட் போடுவதற்கு கிராம மக்கள்…

Plastic Waste Vechicle : மயிலாடுதுறை அருகே 35 அடி ஆழ பள்ளத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் கலந்த மணல்களை கொட்டி தூர்த்து பிளாட் போடுவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். குடிநீர் தட்டுப்பாடு உள்ள நிலையில் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்பை தடுக்கும் வகையில் அந்த பள்ளத்தை நீர் ஆதாரமாக உருவாக்க கோரிக்கை விடுத்தும் குப்பை கொட்ட வந்த வாகனங்களை சிறைபிடித்தும் கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

Plastic Waste Vechicle
Plastic Waste Vechicle

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள வயலில் 20 ஆண்டுகளுக்கு முன்பு 35 அடி ஆழத்திற்கு மணல் எடுக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த பள்ளத்தில் மயிலாடுதுறை நகராட்சி மற்றும் பல்வேறு நபர்கள் குப்பைகளை கொட்டுவதற்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். மேலும் கிராம சபை கூட்டத்தில் குப்பைகளை கொட்டக்கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்..

Plastic Waste Vechicle

இந்நிலையில் அந்த இடத்தை வாங்கிய செந்தில் என்பவர் குப்பைகள் கொட்டப்பட்ட பள்ளத்தை சமன் செய்து பிளாக் போடுவதற்காக பிளாஸ்டிக் கழிவுகள் கலந்த மணல்களை நீடூர் பகுதியில் இருந்து டிராக்டர் லாரிகள் மூலம் வந்து பள்ளத்தில் கொட்டி சமன் செய்ய முற்பட்டார் அப்போது அப்பகுதி கிராம மக்கள் தடுத்து நிறுத்தி வாகனங்களை சிறை பிடித்துள்ளனர் 35 அடி ஆழ பள்ளத்தை மூடி பிளாட் போட்டு விற்பனை செய்தால் அந்த இடத்தை வாங்கி வீடு கட்டினால் ஆபத்து ஏற்படும் என்றும் குடிநீர் தட்டுப்பாடு உள்ள தங்கள் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் கலந்த மணலை கொட்டுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என்றும் குட்டை போல் உள்ள இடத்தை நீராதாரமாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Read Also : சீர்காழி குட் சம்மரிட்டன் பள்ளியில் விளையாட்டு விழா

சம்பவம் அறிந்து வந்த குத்தாலம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பள்ளத்தில் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் கலந்த மணலை அப்புறப்படுத்த உத்தரவிட்டனர். வருவாய்த் துறையினர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதியின் பெயரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்…

புதியது

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.

இப்போதே படிக்க