Poompuhar MLA : மங்கைநல்லூரில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையினை ஏற்று மாவட்ட ஊராட்சி பொது நிதி மற்றும் மத்திய நிதிக்குழு மான்யத்தில் கட்டப்பட்ட பொதுகழிப்பறை கட்டிடத்தை பூம்புகார் எம்எல்ஏ அவர்கள் திறந்து வைத்தார்:
Poompuhar MLA பொதுகழிப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார்
மலாடுதுறை அருகே குத்தாலம் தாலுகா மங்கைநல்லூர் பேருந்து நிறுத்தம் பகுதி கும்பகோணம், திருவாரூர் மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு செல்வதற்கு இந்த பகுதியானது மையப்பகுதியாக உள்ளது. கடை வீதியிலேயே பேருந்து நிறுத்தம் இருப்பதால் 100 க்கும் மேற்பட்ட கடைவீதிக்கு வருகின்ற பொது மக்களும்,மற்றும் பயணிகளும் பொது கழிப்பிட வசதியில்லாமல் மிகவும் அவதி பட்டு வந்தனர்.பல வருடங்களாக கழிப்பிட வசதி செய்து தர வலியுறுத்தி கோரிக்கை விடுத்து வந்தனர்.

பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று கொண்டு கடைவீதியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரி பொது நிதி 2022-2023 மற்றும் 15 வது மத்திய நிதி மானியத்தின் கீழ் நவீன பொதுக்கழிப்பிடம் ரூ.11 லட்சத்து 94 ஆயிரம் தொகை மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டு 30/12/2023 அன்று திறப்புவிழா நடைபெற்றது.
Read Also : பற்களில் மஞ்சள் கரை போக வீட்டு வைத்தியம்
இந்த திறப்புவிழா மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நவீன பொதுகழிப்பறை கட்டடத்தை பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
அரசு நிதியில் கட்டப்பட்ட பொதுக்கழிப்பறையை ஊராட்சி நிர்வாகமும் பொதுமக்களும் முகம் சூளிக்காதவாறு தூய்மையாக வைத்து பராமரிக்க வேண்டும் என்று ஒரு வேண்டுகோளையும் வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் குத்தாலம் ஒன்றியகுழு தலைவர் மகேந்திரனும் ஒன்றிய குழு செயலாளர் ஏ.ஆர்.ராஜா, மங்கை சங்கர் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
Read Also : மொபைல் ஜார்ஜரில் இருக்கிற இந்த குறியீடுகள் எதற்காக தெரியுமா?
உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.
இப்போதே படிக்க


