Home Stories Photos Videos Join
TRENDS
நடிகை கீர்த்தி பாண்டியனின் கிளாமர் ஸ்டில்ஸ்
ஸ்ரீலீலா அசத்தல் கிளிக்ஸ்
ஹைதராபாத் பெண் தொழிலதிபருடைய ரோல்ஸ்-ராய்ஸ் கார்!
வளர்ந்து வரும் கேரளா தொழிலதிபருடைய புது போர்ஷே கார்!
உலகின் பணக்கார பெண் ஃபிரான்ஷுவா பெட்டன் கோர்ட் னுடைய சொத்தின் மதிப்பு !

அரசியலுக்கு முன் மொத்த சண்டையும் முடிவுக்கு கொண்டு வந்துள்ள தளபதி.. அப்பாவுடன் வைரல் ஆகும் புகைப்படம்

Vijay: விஜய் பற்றிய தகவல்கள் என்றாலே பரபரப்புக்கு பஞ்சமே இருக்காது. அவர் கட்சி துவங்கியதிலிருந்து கோட், தளபதி 69 என ஒவ்வொன்றும் சோசியல் மீடியாவை கலக்கி வருகிறது.…

Vijay: விஜய் பற்றிய தகவல்கள் என்றாலே பரபரப்புக்கு பஞ்சமே இருக்காது. அவர் கட்சி துவங்கியதிலிருந்து கோட், தளபதி 69 என ஒவ்வொன்றும் சோசியல் மீடியாவை கலக்கி வருகிறது.

அதேபோன்று அவருடைய தனிப்பட்ட விஷயங்களும் பரபரப்பை உண்டாக்கும். அப்படித்தான் இவருக்கும் இவருடைய அப்பா எஸ் ஏ சந்திரசேகருக்கும் உள்ள மனவருத்தம் எல்லோருக்குமே தெரியும்.

Thalapathy with mom and dad
Thalapathy with mom and dad

ஆனால் இதை குறித்து விஜய் மௌனம் சாதித்தாலும் எஸ் ஏ சந்திரசேகர் அவ்வப்போது மீடியாவில் உளறி கொட்டுவார். அதுவே எரிகிற நெருப்பில் நெய்யை ஊற்றிய கதையாக மாறிவிடும்.

Read Also : ஆனந்தி சமையல் குறிப்பு – 1

பிரச்சனையை தீர்த்த தளபதி | Thalapathy with mom and dad

இதற்கு பல உதாரணங்களை கூறலாம். அதில் முக்கியமானது என்று சொன்னால் விஜய்யின் அரசியல் வருகை பற்றி தான். இதில் தொடங்கிய அப்பா மகன் பிரச்சனை இன்னும் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது என ஊடகங்களில் தகவல்கள் கசிந்து வருகிறது.

இந்நிலையில் விஜய் தன்னுடைய அப்பா மற்றும் அம்மாவுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில் அவர் இருவரின் தோள் மீதும் கையை போட்டு அணைத்தவாறு நிற்கிறார்.

இதற்கு முன்பு கூட எஸ் ஏ சந்திரசேகர் உடல் நல குறைவால் சிகிச்சை பெற்றுக்கொண்ட போது விஜய் அவரை நேரில் சந்தித்து இருந்தார். அந்த புகைப்படமும் வைரலானது. அதன் பிறகு தற்போது வெளியாகி உள்ள இந்த புகைப்படம் இவர்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என கூறாமல் சொல்லிவிட்டது.

Read Also : வீட்டில் ஒரு முறை குடைமிளகாய் சென்னா மசாலாவை செய்து பாருங்கள் !

இதன் மூலம் விஜய் பெரும் சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். மேலும் அரசியல் களம் காண போகும் நேரத்தில் அப்பாவுடன் ஏற்பட்ட மன வருத்தத்தையும் அவர் பேசி தீர்த்துக் கொண்டுள்ளார். அப்படியே மனைவி பிள்ளைகளுடன் உள்ள புகைப்படத்தையும் வெளியிட்டால் மற்றொரு வதந்தியும் முடிவுக்கு வரும்.

புதியது

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.

இப்போதே படிக்க