ஆன்மீக ரீதியாக பல விஷயங்களை பார்த்து தெரிந்துகொண்டிருகிறோம். இருந்தாலும் வீட்டில் ஏதாவது ஒரு விசேஷம் என்றால் உடனே வீட்டில் இருக்கும் பெரியவர்கள் சொல்வது அஷ்டமி அல்லது நவமியா என்று பார்த்து அதன் பின்னர் தான் அந்த விசேஷத்தை செய்யலாம் என்று சொல்வார்கள்.

அஷ்டமி நாளில் செய்ய கூடாதவை | Things Not To do On Ashtami in Tamil
அதிலும் சிலர் சொல்வார்கள் வளர்பிறையில் வரும் அஷ்டமி திதியில் செய்யலாம். தேய்பிறை திதியில் தான் செய்ய கூடாது என்று.. இது அனைத்திற்கும் பதிலாக இந்த பதிவானது இருக்கும். அஷ்டமியில் என்ன செய்யக்கூடாது என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலமாக தெரிந்துகொள்வோம் வாங்க..!
அஷ்டமி அன்று செய்ய கூடாதவை:
அஷ்டமி தினத்தில் எந்த விஷயத்தை செய்ய நினைத்தாலும் அதனை செயலை செய்ய தொடங்கினாலும் அது முழுமை பெறாமல் போய்விடும். அது எவ்வளவு செய்தாலும் அது அவ்வளவு சீக்கிரத்தில் முடியாது. ஆகவே அஷ்டமியில் எந்த ஒரு சுபகாரிய நிகழ்ச்சிகளை செய்யமாட்டார்கள்.
சுபகாரியங்களை செய்யாமல் மறுத்தாலும் இறைவனை வழிபடுவது மிகவும் உகந்த தினமாக இருக்கும். எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் அஷ்டமி திதியில் இறைவனை வழிபட்டால் நன்மை ஏற்படும்.
இதையும் படிங்க : அட்சய திருதியை எப்போது 2024.. தங்கம் வாங்க உகந்த நேரம்..
அஷ்டமி நாளில் என்ன செய்யலாம்? Things Not To do On Ashtami in Tamil
அஷ்டமி நாளில் இறைவனை வழிபடுவதற்கு உகந்த நாளாக இருக்கும். அதிலும் சிறப்பு தேய்பிறையில் வரும் அஷ்டமி தினத்தில் பைரவரை வணங்கினால் சகல செலவங்களையும் பெறலாம் என்று கூறப்படுகிறது.
வாழ்வில் எவ்வளவு தடைகள் வந்தாலும் எல்லாவற்றையும் முறியடித்து நல்ல வழியை காட்டுவார். அஷ்டமி அன்று எந்த ஒரு விசேஷங்களையும் செய்யாமல் இறைவனை வழிபடுவது மனதிற்கும் வாழ்விற்கும் அமைதி தரும்.
தேய்பிறை அஷ்டமி நாளில் என்ன செய்யலாம்?
தேய்பிறை அஷ்டமியில் பித்துருக்களுக்கு தர்ப்பணம் செய்யலாம், மேலும் அன்னதானம் செய்தால் குழந்தை இல்லாமல் உள்ளவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.
தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் நன்மைகள் ஏற்படும். அதாவது வேப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், பசு நெய், இலுப்பை எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் இந்த 5 ம் கலந்தது தான் பஞ்ச தீப எண்ணெய் ஆகும். இந்த எண்ணெய்களை 5 விளக்குகளால் அல்லது 5 முகமுடைய விளக்குகளை ஏற்றி 5 எண்ணெய்களை ஊற்றியும் விளக்குகளை ஏற்றி வழிபாடு செய்யலாம்.
இப்படி செய்வதால் வரவேண்டிய பணம் உங்களுக்கு வந்து சேரும், நீங்கள் யாருக்கு பணம் தர வேண்டுமோ அதனையும் கொடுக்க முடியும். எவ்வளவு பெரிய கடனாக இருந்தாலும் அதனை உடனே கொடுக்க முடியும்.
வயதானவர்கள் உடல் ரீதியாக பிரச்சனைகள் இருந்தால் அவர்களின் உடல் நிலை சீராகும். சனியின் தாக்கம் குறைவாக இருக்கும். வேலை செய்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும்.
இதையும் படிங்க : சுவையாக ரசம் செய்யக்கூடிய முறை!
வளர்பிறை அஷ்டமி திதியில் என்ன செய்யலாம்.?
வளர்பிறை அஷ்டமி திதி அன்று பைரவப்பெருமானை வழிபடலாம். ஆனால் வளர்பிறை அஷ்டமி திதியில் பைரவரை வழிபடுபவர்கள் ஒருபோதும் தேய்பிறை வழிபாட்டினை செய்ய கூடாது. அப்படி செய்தால் 2 வழிபாட்டிருக்குமான பலன்கள் என்பது கிடைக்காது.
அஷ்டமி அன்று கோவிலுக்கு போகலாமா.?
அஷ்டமி அன்று கோவிலுக்கு சுப காரிய நிகழ்ச்சிகள் தான் செய்ய கூடாது. ஆனால், கோவிலுக்கு வழிபாடு செய்ய செல்லலாம்.


