Home Stories Photos Videos Join
TRENDS
நடிகை கீர்த்தி பாண்டியனின் கிளாமர் ஸ்டில்ஸ்
ஸ்ரீலீலா அசத்தல் கிளிக்ஸ்
ஹைதராபாத் பெண் தொழிலதிபருடைய ரோல்ஸ்-ராய்ஸ் கார்!
வளர்ந்து வரும் கேரளா தொழிலதிபருடைய புது போர்ஷே கார்!
உலகின் பணக்கார பெண் ஃபிரான்ஷுவா பெட்டன் கோர்ட் னுடைய சொத்தின் மதிப்பு !

Big News : Vijayakanth Health : தேமுதிக தலைவர் விஜயகாந்த் (ICU) வார்டில் சிகிச்சை ! வெளிவந்த புதிய தகவல் !

Vijayakanth Health : தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலம் சரியில்லாமல் கடந்த சனிக்கிழமை அன்று மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நலக்குறைவால் மருத்துவ சிகிச்சை பெற்று வரும்…

Vijayakanth Health : தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலம் சரியில்லாமல் கடந்த சனிக்கிழமை அன்று மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உடல்நலக்குறைவால் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு ஐ சி யூ வில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகராக இருந்தவர் விஜயகாந்த்,நடிகர் சங்கத்தலைவராகவும், பின்பு தேமுதிக என்ற கட்சியினை தொடங்கி முழுநேர அரசியலிலும் இறங்கினார். கலைஞ ர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் இருந்தபோதே அவர்களுக்கு போட்டியாக கட்சி அமைப்புகளை பலப்படுத்தி பத்து சதவீதம் வாக்குகளை விஜயகாந்த் பெற்றார்.

Vijayakanth Health
Vijayakanth Health

கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்து 40 தொகுதிகளில் போட்டியிட்டு அதில் 29 தொகுதிகளில் வென்று எதிர்க்கட்சி தலைவர் ஆனார். அடுத்து நடந்த தேர்தலில் மக்கள் நல கூட்டணியுடன் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு விஜயகாந்த் அந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

Most Read : TN Cooperative Bank Recruitment 2023

இந்த நிலையில் அவருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக கட்சிப்பணிகள் அனைத்தையும் அவருடைய மனைவி திருமதி பிரேமலதா கவனித்துவருகிறார். பிரேமலதா தேமுதிகவின் பொருளாளராகவும் இருந்துவருகிறார்.

Vijayakanth Health | விஜயகாந்த் உடல்நலக்குறை

தேமுதிக தலைவர் திரு விஜயகாந்த் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த சனிக்கிழமை சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சளி, இருமல் மற்றும் தொண்டை வலி பாதிப்பு இருந்த நிலையில் அவரை வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவ மனைக்கு சென்றுள்ளதாக தேமுதிக கட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.

இதுதொடர்பாக தேமுதிக கட்சி சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தலைவர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்றிருக்கிறார். ஓரிரு தினங்களில் வீடு திரும்புவார். யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் .என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read : Best Vastu Plants for Home in Tamil

இந்த நிலையில் இப்பொழுது விஜகாந்த்தின் உடல்நிலை நன்றாக என்றும் அவரின் உடல்நிலை மற்றும் உறுப்புகளின் செயல்பாட்டை கண்காணிப்பதற்காகவே ஐசியூ அறையில் வைத்து மருத்துவ சிகிச்சை அளிப்பதாகவும், நுரையீரல் சளி பாதிப்பால் மூச்சுவிடுவதில் லேசான சிரமம் இருந்தாலும் தாமாகவே சுவாசித்து கொண்டுள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

Watch Video : உதயநிதியை சாடிய பிரேமலதா விஜயகாந்த்

புதியது

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.

இப்போதே படிக்க