Primary school teachers protest : மயிலாடுதுறை அருகே பழைய ஓய்வு ஊதியதிட்டத்தை அமுல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
Primary school teachers protest
மயிலாடுதுறை அருகே சித்தர்காடு பகுதியில் இருக்கும் வட்டார கல்வி அலுவலகம் முன்பாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டார்கள். தொடர்ந்து தமிழகஅரசு பழைய நடைமுறையை அமல்படுத்தி பதவி உயர்வு ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.

ஊதிய முரண்பாட்டை சரி செய்து சம வேலைக்கு சம உரிமை வழங்க வேண்டும். அகவிலை படி நிலுவை மற்றும் ஈட்டிய விடுப்பு உள்ளிட்டவற்றை உடனே வழங்கி பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையினை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தேர்தல் அறிக்கையில் அரசு தெரிவித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று ஆசிரியர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.
Read Also : 70 ஆண்டுகளுக்கு பின்பு சந்தித்து கொண்ட முன்னாள் மாணவர்கள்…
உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.
இப்போதே படிக்க


