HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

செய்தி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த பெண்மணிக்கு வீடு கட்டி தந்த மயிலாடுதுறையைச் சேர்ந்த சமூக சேவகர்

A social worker built the house

A social worker built the house : வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தரை மட்டமான தூத்துக்குடியைச் சேர்ந்த பெண்மணிக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக பார்த்து வீடு கட்டி தந்த மயிலாடுதுறையைச் சேர்ந்த சமூக சேவகர் :-

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பாரதி மோகன் குடிசை வீட்டில் வாழ்ந்து வரும் நிலையில் நாள் தோறும் 100 மேல் ஏழைகளுக்கு நண்பர்கள் உதவியுடன் உணவு வழங்கி வருகிறார். மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் சுற்றி திரியும் மன நோயாளிகளை அழைத்து வந்து சுத்தம் செய்து குளிக்க வைத்து புது ஆடைகள் அணிவித்து, அவர்களை சமூக வலைதளங்கள் மூலம் குடும்பத்தினர் வீட்டில் ஒப்படைக்கும் பணியை செய்து வருகிறார்.

A social worker built the house
A social worker built the house

இந்நிலையில் சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட ஏரல் வட்டம் கொடுங்கணி பகுதியைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவரது வீடு தரைமட்டமான தகவலை சமூக வலைதளங்களில் பார்த்து நண்பர்கள் உதவியோடு அந்த பகுதிக்கு நேரில் சென்று அங்கேயே தங்கி சிமெண்ட் ஸ்லாப் உடன் கூடிய வீட்டை கட்டி கொடுத்தார் மற்றும் வீட்டுக்கு தேவையான மிக்ஸி பேன் கிரைண்டர் பாத்திரங்கள் போன்றவற்றை முத்துலட்சுமியிடம் வழங்கினார்.

Read Also : ஆதினத்தின் ஸ்ரீ கோமுதீஸ்வரர் திருக்கோவிலில் தைரத சப்தமி பெருவிழா..!

சமூக சேவகர் பாரதி மோகனின் இந்த செயலானது. தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது.

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்