Ayodhya Ram Mandir Donation | அயோத்தியில் அமைந்துள்ள ராமர் கோவிலுக்கு இதுவரை ஏராளமான ராம பக்தர்கள் நன்கொடை அளித்துள்ளார்கள். அதிலிருந்து இதுவரை ராமர் கோவிலுக்கு சுமார் 5000 கோடி ரூபாய் நன்கொடை வந்துள்ளது. ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா டிரஸ்டின்படி, இதுவரை கோவில் பிரதிஷ்டை நிதிக்கு 3200 கோடி வரவு வைக்கப்பட்டிருக்கிறது.

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெறுவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளன. ராமர் கோவிலுக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாழும் ராம பக்தர்கள் தாராளமாக நன்கொடை அளித்துள்ளனர்.
அயோத்தியில் ராமர் கோயில் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டபோது ராம பக்தர்கள் இந்த அளவிற்கு நன்கொடை வழங்குவார்கள் என்று யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். அப்படி பக்தர்கள் தந்த நன்கொடையில் கிடைத்த அந்த வட்டிப் பணத்தில் கோயிலின் முதல் தளம் கட்டி முடிக்கப்பட்டது.அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் இன்றும் நன்கொடை கொடுத்து வருகின்றனர்.
Ayodhya Ram Mandir Donation
ராமர் கோயிலுக்கு இதுவரை 5000 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடையாக கிடைத்துள்ளது. ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா ட்ரஸ்டின் படி, இதுவரைக்கும் கோவில் பிரதிஷ்டை நிதிக்கு ரூ. 3200 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது.
ராம மந்திர் அறக்கட்டளை நாட்டின் 11 கோடி மக்களிடம் இருந்து நன்கொடையாக ரூ.900 கோடி வசூலிக்க இலக்கு நிர்ணயித்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் ராமர் கோவிலுக்கு டிசம்பர் 2023 வரை 5000 கோடிக்கு மேல் நன்கொடையாக கிடைத்துள்ளது. ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின்படி, ராமர் கோயில் அமைப்பதற்காக இதுவரை 18 கோடி ராம பக்தர்கள் நேஷனல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் பணத்தை டெபாசிட் செய்துள்ளனர்.
Read Also : ஈர், பேன், பொடுகு பிரச்சனை நீங்க.!
அறக்கட்டளை, நன்கொடையாக கொடுத்த பணத்தை, இந்த வங்கிக் கணக்குகளில் செலுத்தி, அதில் வருகின்ற வட்டியில் இருந்து, தற்போது கோவில் கட்டப்பட்டுள்ளது. ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் இணையதளத்தில் கூறியுள்ள தகவல்களின்படி, அயோத்தியில் கட்டப்படும் பிரமாண்ட ராமர் கோவிலுக்கு ஆன்மீக குரு மொராரி பாபு இதுவரை மிகப்பெரிய தொகையை நன்கொடையாக அளித்துள்ளார். மொராரி பாபு 11.3 கோடி ரூபாயை ராமர் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கி இருக்கிறார்.
அமெரிக்கா, கனடா மற்றும் லண்டனில் இருக்கும் அவரது சீடர்கள் இணைந்து ரூ. 8 கோடி தனித்தனியாக வழங்கினர். மேலும், குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி கோவிந்த்பாய் தோலாகியா ராமர் கோயில் கட்டுவதற்காக 11 கோடி ரூபாயினை நன்கொடையாக அளித்திருக்கிறார். ஸ்ரீ ராமகிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் என்ற வைர நிறுவனத்தின் உரிமையாளர் கோவிந்த்பாய் தோலாகியா.
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட நன்கொடை வசூலிக்கும் பிரச்சாரத்தை அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் துவங்கி வைத்தார். ராமர் கோயில் கட்ட நன்கொடை அளித்த முதல் நபர் ராம்நாத் கோவிந்த். ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைக்கு காசோலை மூலமாக ரூ. 5 லட்சம் நன்கொடையாக அளிக்கப்பட்டது.
அமெரிக்காவிலிருந்து முதல் வெளிநாட்டு நன்கொடையாக அயோத்தியில் உள்ள ராம் லாலா கோயிலுக்கு வந்தது. அமெரிக்காவில் வசிக்கும் ராம பக்தர் ஒருவர் (பெயர் வெளியிடப்படவில்லை) கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடையாக ரூ.11,000 அனுப்பியுள்ளார்.
2024 ஆம் வருடம் ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோவிலுக்கு பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் தற்போது இறுதிக்கட்டதை எட்டியுள்ளது. 12:29 நிமிடங்கள் 8 வினாடிகள் முதல் 12:30 நிமிடங்கள் 32 வினாடிகள் வரையிலான 84 வினாடிகள் ராமர் கோயிலுக்கு பிரதிஷ்டை செய்வதற்கான நல்ல நேரம்.
உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.
இப்போதே படிக்க


