Home Stories Photos Videos Join
TRENDS
நடிகை கீர்த்தி பாண்டியனின் கிளாமர் ஸ்டில்ஸ்
ஸ்ரீலீலா அசத்தல் கிளிக்ஸ்
ஹைதராபாத் பெண் தொழிலதிபருடைய ரோல்ஸ்-ராய்ஸ் கார்!
வளர்ந்து வரும் கேரளா தொழிலதிபருடைய புது போர்ஷே கார்!
உலகின் பணக்கார பெண் ஃபிரான்ஷுவா பெட்டன் கோர்ட் னுடைய சொத்தின் மதிப்பு !

இந்தியாவில் இதுதான் மிகவும் வறுமையான மாநிலம்.. தமிழ்நாடு எந்த இடத்தில் இருக்கிறது தெரியுமா?

Poverty Rate | இது ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டம் (UNDP) மற்றும் ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாடு (OPHI) போன்றவற்றால் வெளியிடப்பட்டுள்ளது. வறுமையை ஒழிப்பதற்கான…

Poverty Rate | இது ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டம் (UNDP) மற்றும் ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாடு (OPHI) போன்றவற்றால் வெளியிடப்பட்டுள்ளது.

வறுமையை ஒழிப்பதற்கான இந்தியாவின் முயற்சியினை ஐக்கிய நாடுகள் சபை பாராட்டி உள்ளது. ஐநா மதிப்பீட்டின்படி, 2005-2006 மற்றும் 2019-2021-க்கு மத்தியில், இந்தியாவில் ஏழைகளுடைய எண்ணிகை சுமார் 41.5 கோடி குறைந்துள்ளது. இதனை வரலாற்று மாற்றம் என்று ஐநா சபை தெரிவித்துள்ளது.

இது ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டம் (UNDP) மற்றும் ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாடு (OPHI) உள்ளிட்டவற்றால் வெளியிடப்பட்டுள்ளது.

which is the poor state of india
which is the poor state of india

இந்தியாவின் மாநிலங்கங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வறுமை நிலை MPI வாயிலாக கணக்கெடுக்கப்படுகிறது. அதன்படி வறுமை ஒழிப்பில் இந்தியாவில் மிகவும் பின் தங்கியுள்ள மாநிலமாக பீகார் இருக்கிறது.

அடுத்து ஜார்கண்ட், அதனை தொடர்ந்து உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் இருக்கிறது. இதற்கு அடுத்த படியாக மேகாலயா உள்ளது.

இந்நிலையில் 51.9% வறுமை விகிதத்துடன் இந்தியாவின் மிகவும் ஏழ்மையான மாநிலமாக பீகார் இருக்கிறது. மேலும் உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலங்கள் 3 மற்றும் 4 வது இடங்களை வகிக்கிறது.

இந்நிலையில் கோவாவில் வறுமை வேகமாக குறைந்து கொண்டுள்ளதாகவும் அதே போல ஜம்மு காஷ்மீர், ஆந்திர பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களிலும் வறுமை குறைந்து கொண்டுள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

இந்தியாவிலே கேரளாவில் தான் வறுமை குறைவாக இருக்கிறது. அதாவது மொத்த மக்கள் தொகையில் 0.71% மக்கள் மட்டுமே வறுமை கோட்டின் கீழ் வசிக்கின்றனர். இதேபோல கோவாவில் 3.76%, சிக்கிமில் 3.82%, தமிழ்நாட்டில் 4.89% மற்றும் பஞ்சாபில் 5.59% வறுமையுடன் உள்ளது.

நிதி ஆயோக்கின் அறிக்கையின் கீழ் இந்தியாவின் வறுமை மிகுந்த மாநிலமாக பீகார் இருக்கிறது. குறிப்பாக தாய்மார்களின் ஆரோக்கியம், கல்வி, உணவு, மின்சாரம் என அனைத்திலும் பின்தங்கியுள்ளது.

புதியது

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.

இப்போதே படிக்க