Home Stories Photos Videos Join
TRENDS
நடிகை கீர்த்தி பாண்டியனின் கிளாமர் ஸ்டில்ஸ்
ஸ்ரீலீலா அசத்தல் கிளிக்ஸ்
ஹைதராபாத் பெண் தொழிலதிபருடைய ரோல்ஸ்-ராய்ஸ் கார்!
வளர்ந்து வரும் கேரளா தொழிலதிபருடைய புது போர்ஷே கார்!
உலகின் பணக்கார பெண் ஃபிரான்ஷுவா பெட்டன் கோர்ட் னுடைய சொத்தின் மதிப்பு !

தரங்கம்பாடி கடற்கரையில் நிச்சயதார்த்தம் முடிந்த வாலிபர் கடலில் மூழ்கி பலியான சோகம்..

The young man who got engaged drowned in the sea : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மணிக்கூண்டு அருகே உள்ள வீரபத்திரர் கோவில் தெருவை…

The young man who got engaged drowned in the sea : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மணிக்கூண்டு அருகே உள்ள வீரபத்திரர் கோவில் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி மகன் நவீன் குமார்(23)… இவருக்கும் செக்கடி தெருவை சேர்ந்த குமார் மகள் நிவேதாவிற்கும் நேற்று கும்பகோணத்தில் உள்ள கோவில் ஒன்றில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது… இந்நிலையில் நிச்சயத்திற்கு வந்த உறவினர்கள் 25 பேர் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரைக்கு சுற்றுலா வந்துள்ளனர்

The young man who got engaged drowned in the sea
The young man who got engaged drowned in the sea

தொடர்ந்து கடலில் குளித்த போது நவீன் குமார் நிவேதா மற்றும் கும்பகோணம் நாராயண தெருவை சேர்ந்த பிரகாஷ் மகன் சரவணன்(12) ஆகிய மூவரும் அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டதைக் கண்ட உறவினர்கள் சத்தம் போட்டதை எடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கடலோர காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று அலையில் சிக்கிய மூவரையும் மீட்டனர்… இதில் சம்பவ இடத்திலேயே நவீன் குமார் மற்றும் சிறுவன் சரவணன் இருவரும் உயிரிழந்தனர்

இதனை அடுத்து உயிருக்கு போராடிய நிவேதாவை போலீசார் மீட்டு பொறையார் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், மேலும் இறந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Read also : உங்களுக்கு கீரிப்பிள்ளை பற்றி தெரியுமா.?

இது குறித்து தரங்கம்பாடி கடலோர காவல் நிலைய போலீசார் மற்றும் பொறையார் சட்டம் ஒழுங்கு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்… நிச்சயம் முடிந்த அடுத்த நாளே கடலில் மூழ்கி திருமணம் செய்ய உள்ள வாலிபர் மற்றும் சிறுவன் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது…

The young man who got engaged drowned in the sea

https://www.youtube.com/watch?v=KiK5JOBwWZo
The young man who got engaged drowned in the sea
புதியது

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.

இப்போதே படிக்க