பிஜேபி முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் எதிரானது பல்லாவரத்தில் மமக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சட்ட மன்ற உறுப்பினர் அப்துல் சமது குற்றச்சாட்டு.
சென்னை அடுத்த பல்லாவரம் டாக்டர் அம்பேத்கர் சிலை அருகில் பல்லாவரம் மனித நேய மக்கள் கட்சி சார்பில் வெல்லட்டும் இந்தியா பொதுகூழு தீர்மானங்கள் விளக்க பொதுக்கூட்டம் தமுமுக மாவட்ட செயலாளர் பாரூக் அகமது தலைமையில் நடைபெற்றது.

இதையும் படிங்க : குணா பட கதாநாயகி ரோஷினி யாரு தெரியுமா?.. ஜோதிகாவின் சொந்த அக்காவா?.. உண்மை தெரியுமா?
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுசெயலாளரும் சட்ட மன்ற உறுப்பினருமான அப்துல்சமது மற்றும் மாநில துணை பொதுச்செயலாளரும், தாம்பரம் மாமன்ற உறுப்பினருமான தாம்பரம் யாக்கூப் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
BJP is not only against Muslims
இதில் சட்ட மன்ற உறுப்பினர் அப்துல் சமது பேசுகையில் பிஜேபி முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் எதிரானது என்று அவர் குற்றச்சாற்றினார். மேலும் இதில் மாநில அமைப்பு செயலாளர் பழனி பாரூக், தலைமை கழக பேச்சாளர் சலீம்கான், மாவட்ட தலைவர் ஜாஹீர் உசேன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இதையும் படிங்க : ஆர்டிக்கிள் 370 அவர்னஸ் படம் : பிரியாமணி
இதில் மமக நிர்வாகிகள் அப்துல் அஜீஸ், சாதிக் பாஷா, அப்துல் ஷெரிப், மன்சூர் அலி, முனைவர் ஹீசைன் மற்றும் மகளிரணி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமனோர் கலந்து கொண்டனர்.
உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.
இப்போதே படிக்க


