Home Stories Photos Videos Join
TRENDS
நடிகை கீர்த்தி பாண்டியனின் கிளாமர் ஸ்டில்ஸ்
ஸ்ரீலீலா அசத்தல் கிளிக்ஸ்
ஹைதராபாத் பெண் தொழிலதிபருடைய ரோல்ஸ்-ராய்ஸ் கார்!
வளர்ந்து வரும் கேரளா தொழிலதிபருடைய புது போர்ஷே கார்!
உலகின் பணக்கார பெண் ஃபிரான்ஷுவா பெட்டன் கோர்ட் னுடைய சொத்தின் மதிப்பு !

ஹர்திக் பாண்டியா-நடாஷா விவாகரத்து போல சர்ச்சைக்குள்ளாகி விவாகரத்து பெற்ற இந்திய கிரிகெட் வீரர்கள்!

தற்போது இணையத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்டியா மற்றும் அவரின் காதல் மனைவி நடாஷா ஸ்டான்கோவிச் விவாகரத்து செய்யவுள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்து பெரும்…

தற்போது இணையத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்டியா மற்றும் அவரின் காதல் மனைவி நடாஷா ஸ்டான்கோவிச் விவாகரத்து செய்யவுள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்து பெரும் சர்ச்சையை உண்டாக்கி வருகின்றன. ஆனால் இந்த விவாகரத்து பற்றி இரு தரப்பினரும் எதுவும் சொல்லாமல் அமைதி காத்து வருகின்றனர்.

Divorce Controversy India Cricketer
Divorce Controversy India Cricketer

இந்நிலையில் நடாஷா ஹர்திக் பாண்டியாவின் 70 சதவீத சொத்தை கைப்பற்றி விவாகரத்து பெறப்போவதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதுப்போல ஏற்கனவே பல கிரிக்கெட் வீரர்கள் சர்ச்சைக்குரிய விவாகரத்து பெற்றுள்ளார்கள். இப்போது அந்த கிரிக்கெட் வீரர்கள் யார்யார் என்பதை குறித்து காண்போம்.

Divorce Controversy India Cricketer

ஷிகர் தவான்

இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தனது முன்னாள் மனைவி ஆஷா முகர்ஜியினை முதல் முதலாக ஃபேஸ்புக்கில் சந்தித்து, 2012 ஆம் வருடத்தில் திருமணம் செய்து கொண்டார். ஆஷா முகர்ஜிக்கு இது 2 ஆவது திருமணம் மற்றும் இவருக்கு முதல் கணவருடன் இரண்டு மகள்கள் உள்ளனர். ஆனால் ஷிகர் தவானுக்கோ இது முதல் திருமணம்.

 Shikhar Dhawan Ayesha Mukherjee
Shikhar Dhawan Ayesha Mukherjee Divorce Controversy India Cricketer

இவ்விருவருக்கும் ஒரு மகன் இருக்கிறார். ஆஷா ஆஸ்திரேலியாவில் மகனுடன் வசித்து வந்தார் மற்றும் இந்தியாவிற்கு வரவும் மறுத்துவிட்டார், மகனிடம் இருந்து ஷிகரை பிரித்து வைத்தார். 2023 ஆம் வருடத்தில், டெல்லி நீதிமன்றம் ஷிகர் தவானுக்கு ஆஷாவால் நேர்ந்த மனக்கொடுமையின் அடிப்படையில் விவாகரத்து அளித்தது.

தினேஷ் கார்த்திக்

இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தனது குழந்தைப்பருவ தோழியான நிகிதா வஞ்சராவை 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் இத்திருமணம் நிலைக்கவில்லை. நிகிதாவிற்கு தினேஷின் சக வீரரான முரளி விஜய்யுடன் தொடர்பு உள்ளதாக ஒரு சர்ச்சை கிளம்பியது. இது இவர்கள் இருவரின் விவாகரத்துக்கு வழி செய்தது.

Divorce Controversy India Cricketer
Divorce Controversy India Cricketer

பின் 2015 ஆம் ஆண்டு தினேஷ் கார்த்திக் ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பள்ளிக்கலை மணம்புரிந்து கொண்டார். இத்தம்பதியருக்கு 2021ஆம் வருடம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தனர்.

வினேத் காம்ப்ளி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் வினோத் காம்ப்ளி தனது சிறுவயதிலிருந்தே தோழியாகவுள்ள நோயெலா லூயிஸை முதலில் கல்யாணம் செய்து கொண்டார். இருப்பினும் இவர்கள் இருவருக்கும் 2005ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பின் வினோத் காம்ளி முன்னாள் மாடலான ஆண்ட்ரயா ஹெவிட்டை மறுமணம் செய்து கொண்டார். இதற்காக கிறிஸ்துவ மதத்திற்கும் மாறினார் வினோத். இத்தம்பதியருக்கு இரண்டு மகன்களும், 1 மகளும் இருக்கிறார்கள்.

மொஹமத் அசாருதீன்

முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டனான மொஹமத் அசாருதீனின் தனிப்பட்ட வாழ்க்கை சிறிது சர்ச்சை நிறைந்தது. இவர் முதலில் நவ்ரீனைதிருமணம் செய்தார் மற்றும் இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஆனால் 1996 ஆம் வருடம் பாலிவுட் நடிகை சங்கீதா பிஜ்லானியை கல்யாணம் செய்வதற்காக நவ்ரீனை விவாகரத்து செய்தார். ஆனால் அவர்களும் திருமணமாகி 14 வருடங்களுக்கு பின் விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பின் முகமது அசாருதீன் விளையாட்டு பிரபலங்களான ஜ்வாலா குட்டா மற்றும் ஷானன் மேரி ஆகியோருடன் கிசுகிசுக்கப்பட்டார்.

முகமது ஷமி

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜஹான் ஆவார், அவர் மீது 2018 ஆம் வருடத்தில் விபச்சார வழக்கு மற்றும் குடும்ப துஷ்பிரயோகம் என்று வழக்கு பதிவு செய்தார். இருப்பினும் முகமது ஷமி இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து, இது பொய்யானவை எனவும், தனது பெயரை களங்கப்படுத்துவதற்காக சதி செய்வதாகவும் கூறினார். தற்போது இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இவர்கள் இருவருக்கும் ஒரு மகள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரவி சாஸ்திரி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பல காரணங்களினால் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்திருக்கிறார். இவர் 1980ஆம் ஆண்டு நடிகை அம்ரிதா சிங்குடன் டேட்டிங்கில் இருந்ததோடு, அவர்களுக்கு நிச்சயதார்த்தமும் நடந்ததாக செய்திகள் வெளிவந்தன. அதன் பின் இவர்கள் இருவரும் தனியே பிரிந்து இவர்களுடைய வாழ்க்கையில் முன்னேறினர். அதன் பின் ரவி சாஸ்திரி ரிது சிங்கை கல்யாணம் செய்து கொண்டார்.

ரிது சிங் ஒரு டாக்டர் மட்டுமில்லாமல், கிளாசிக்கல் நடன கலைஞரும் ஆவார். ஆனால் 22 வருடங்களுக்கு பின், 2012 ஆம் ஆண்டு இவர்கள் விவாகரத்து பெற்று கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார். அதன் பின் 2018ஆம் வருடம் ரவி சாஸ்திரி நடிகை நிம்ரத் கவுருடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டார். ஆனால் இதை இவர்கள் இருவரும் மறுத்தார்கள்.

இதையும் படிங்க : டேஷா போச்சு… சுசித்ராவால் அசிங்கப்படும் கார்த்திக்… 2 ஆவது மனைவி போட்ட வைரல் பதிவு!…

புதியது

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.

இப்போதே படிக்க