Home Stories Photos Videos Join
TRENDS
நடிகை கீர்த்தி பாண்டியனின் கிளாமர் ஸ்டில்ஸ்
ஸ்ரீலீலா அசத்தல் கிளிக்ஸ்
ஹைதராபாத் பெண் தொழிலதிபருடைய ரோல்ஸ்-ராய்ஸ் கார்!
வளர்ந்து வரும் கேரளா தொழிலதிபருடைய புது போர்ஷே கார்!
உலகின் பணக்கார பெண் ஃபிரான்ஷுவா பெட்டன் கோர்ட் னுடைய சொத்தின் மதிப்பு !

மயிலாடுதுறையில் சமத்துவம் காண்போம் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி..

Let's find equality marathon : மயிலாடுதுறையில் சமத்துவம் காண்போம் விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை எஸ்பி மீனா கொடியசைத்து துவங்கி வைத்தார் , சிறுவர்கள் முதல் பெரியவர்கள்…

Let’s find equality marathon : மயிலாடுதுறையில் சமத்துவம் காண்போம் விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை எஸ்பி மீனா கொடியசைத்து துவங்கி வைத்தார் , சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

Let's find equality marathon
Let’s find equality marathon

Let’s find equality marathon

மயிலாடுதுறையில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில், சமத்துவம் காண்போம் விழிப்புணர்வு மரத்தான் போட்டி நடந்தது. மூன்று பிரிவுகளில் ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் தனித்தனியாக நடைபெற்ற இந்த போட்டியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா கொடியசைத்து துவங்கி வைத்தார்.

18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் பிரிவினருக்கு 7 கிலோமீட்டர் தூரமும் பெண்கள் பிரிவினருக்கு ஐந்து கிலோமீட்டர் தூரமும், 14 வயதிலிருந்து 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஆண்கள்,பெண்கள் ஆகியோருக்கு 3 கிலோமீட்டர் தூரமும் , 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு1 கிலோ மீட்டர் தூரம் என்று மூன்று பிரிவுகளில் தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றது.

இந்த போட்டிகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 800 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போட்டிகள் அனைத்தும் மேலையூரில் உள்ள அழகு ஜோதி பள்ளியில் நிறைவடைந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா பரிசுகளை வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார். இந்த மாரத்தான் போட்டியில் காவல்துறையினரும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்..

Read Also : சித்தர்காட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி TNCSC ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

புதியது

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.

இப்போதே படிக்க