Naga farmer sows once reaps twice : ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல ஒருமுறை நெல் விதைப்பு செய்து இரண்டு முறை அறுவடை செய்து அசத்தல் சம்பவத்தை நாகை விவசாயி அரங்கேற்றிய ருசிகர சம்பவம்.

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அருகே உள்ள கொத்தங்குடி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி உதயகுமார்.. இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக தனக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டு விவசாய பணியில் ஈடுபட்டு வருகிறார் இவர் கடந்த ஜூன் மாதம் தனக்கு சொந்தமான விளைநிலத்தில் குருவைப் பணிகளை தொடங்கி நேரடி நெல் விதைப்பாக திருப்பதி 5 ரக நெல்லை தெளித்துள்ளார். இந்த நிலையில் திடீரென பெய்த கன மழையால் பாதிக்கப்பட்டு பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு புரட்டாசி மாதம் நெல் அறுவடை செய்துள்ளார்
Naga farmer sows once reaps twice
Read Also : குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் குத்தாலத்தில் ரத்ததான முகாம்
இந்த நிலையில் ஒரு ஏக்கருக்கு 35 முதல் 40 மூட்டைகள் வரை கிடைக்கும் என எதிர்பார்த்து இருந்த நிலையில் சுமார் 20 மூட்டை நெல்மணிகளே கிடைத்ததால் மன வருத்தத்தில் இருந்ததாகவும் பின்னர் காலடி விவசாயம் செய்வதற்கு போதுமான தண்ணீர் மற்றும் செலவு செய்வதற்கான பணம் இல்லாததால் விளைநிலத்தை அறுவடைக்கு பின்னர் அப்படியே விட்டுவிட்டார்
இந்நிலையில் பூமித்தாய் திடீரென தொடர்ந்து பெய்த மழையால் குருவை அறுவடை பணியின் போது நெற்கதிர்ந்து சிதற நெல்மணிகள் தானாகவே மீண்டும் முளைக்க தொடங்கியதாகவும் அதனைக் கண்ட விவசாயி உதயகுமார் நெற்கதிருக்கு தேவையான தண்ணீர் உரம் கொடுத்து தொடர்ந்து பராமரித்துள்ளார்
இதனால் மீண்டும் அறுவடை நிலைக்கு எட்டிய பயிரை இரண்டாவது முறையாக அறுவடை செய்து விவசாயி பெரு மகிழ்ச்சி அடைந்திருப்பதாகவும் பத்தியக்கர் விவசாயம் செய்வதற்கு உழவு பணி ஆட்கள் கூலி விதை நெல் செலவு உட்பட ஒரு லட்சம் ரூபாய் செலவாகும் எனவும் ஒரு முறை தெளித்த நெல்மணிகள் மீண்டும் முளைத்ததால் இரண்டாவது முறை அறுவடை செய்ததாலும் முதல் முறையில் கிடைக்காத வருமானம் இரண்டாவது முறையில் கிடைத்ததாக விவசாயி பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளார்… இச்சம்பவம் அங்குள்ள ஊர் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…
உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.
இப்போதே படிக்க


