மங்கைநல்லூர் அருகே பேருந்து நிறுத்தம், அங்காடி கட்டடம், மயிலாடுதுறை எம்பி, பூம்புகார் எம்எல்ஏ பயன்பாட்டிற்கு 9/03/2024 திறந்து வைத்தார் மற்றும் புதிதாக கட்டப்பட இருக்கும் பாலத்திற்கும் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தனர்:-

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மங்கைநல்லூர் அடுத்த பாலூர் கிராமத்தில் பொதுமக்களின் பல நாள் கோரிக்கையை ஏற்று ஏழு லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பகுதி நேர அங்காடி கட்டிடதின் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன், எம் பி.ராமலிங்கம் ஆகியோர் பங்கேற்று மக்களின் பயன்பாட்டிற்கு 9/03/2024 லில் திறந்து வைத்தனர்.
தொடர்ந்து வீரசோழன் ஆற்றின் குறுக்கே நபார்டு திட்டத்தின் மூலம் ரூபாய் 1 கோடியே 84 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டுவதற்காக சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், ராமலிங்கம் எம் பி உள்ளிட்டோர் புதிய பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினர்.
இதையும் படிங்க : உங்கள் சருமம் அழகு பெற அருமையான அழகு தகவல்கள்!
Near Mangainallur bus stand open
அதனைத் தொடர்ந்து மேலமங்கநல்லூர் கடைவீதியில் ஊராட்சி குழு பொது நிதியிலிருந்து பத்து லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிறுத்தத்தையும் திறந்து வைத்தனர். இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் உமா மகேஸ்வரிசங்கர்,கிழக்கு ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர்,குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன், மற்றும் கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் ஆகிய ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க : சுவையான திருமண வீட்டு நெய் சாதம் செய்வது எப்படி ? – 6
உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.
இப்போதே படிக்க


