Villagers celebrating school centenary : நாகை அருகே வலிவலத்தில் ஆட்டம் பாட்டத்துடன் கல்யாண சீர்வரிசை எடுத்து வந்து பள்ளி நூற்றாண்டு விழாவை கொண்டாடிய கிராம மக்கள்..

நாகை மாவட்டம் பலிவளத்தில் ஆட்டம் பாட்டத்துடன் கல்யாண காதணி விழாவிற்கு மாமன் சீர்வரிசை போல எடுத்து வந்து பள்ளி நூற்றாண்டு விழாவை கிராம மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். பாடம் சொல்லித் தந்த ஆசிரியர்களுக்கு மாலை இட்டு ஊர்வலமாக அழைத்து வந்து மரியாதை செய்து அசத்திய முன்னாள் மாணவர்கள் பயிற்சியையும் நிகழ்ச்சி அதிகமாக குடும்பத்தோடு தங்களுடைய நினைவுகளை நிகழ்விலே பகிர்ந்து கொண்டனர்.
Villagers celebrating school centenary
நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த வழிவளத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது 1923 ஆம் ஆண்டு திண்ணைப் பள்ளியாக தொடங்கப்பட்ட இந்த பலியானது ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியாக மாற்றப்பட்டு நூற்றாண்டையும் கடந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது
இந்த நிலையில் நூற்றாண்டு நிறைவு செய்த பள்ளியின் விழாவை கோலாகலமாக கொண்டாட முடிவு செய்த கிராம மக்கள் மற்றும் பள்ளியில் படித்து பல்வேறு பகுதிகளில் வசிக்கக்கூடிய முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைந்து பள்ளிக்கு தேவையான மூன்று லட்சம் மதிப்பில் ஸ்மார்ட் டிவி,மேஜை நாற்காலி, மின்விசிறி உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் கல்வி உபகரணங்களையும், மேளதாளம் ஆட்டம் பாட்டத்துடன் கல்யாண காதணி விழாவிற்கு தாய்மாமன் சீர்வரிசை உடன் ஊர்வலமாக வருவது போல எடுத்து வந்து பள்ளிக்கு வழங்கி மகிழ்ந்தனர், மேலும் தங்களுக்கு பாடம் சொல்லி தந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் பெருமக்களுக்கு மாலையிட்டு மலர் தூவி ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து வந்து நினைவுப் பரிசுகளை வழங்கி மரியாதை செய்தனர்.
Read Allso : Moo Varisai Words in Tamil : மோ வரிசையில் இருக்கிற சொற்கள் …!
நிகழ்ச்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நூலகம் மற்றும் நூற்றாண்டு பள்ளி வளாகப் பாதையை மாவட்ட கூடுதல் ஆட்சியர் ரஞ்சித் சிங் மற்றும் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் ஆகியோர் திறந்து வைத்து சிறப்பித்தனர். இதனைத் தொடர்ந்து இந்தப் பள்ளியில் படித்து முடித்த முன்னாள் மாணவர்கள் தங்களது குடும்பத்தினரோடு தற்போது படிக்கும் மாணவ மாணவிகளோடு பழைய நினைவுகளை மகிழ்வோடு பகிர்ந்து கொண்டனர் மேலும் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளை வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது
Also Read
- கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா விவாகரத்து அறிவிப்பு.. இணைந்து அறிவித்த நட்சத்திர தம்பதி!
- கணவனின் 3 வது திருமணத்திற்கு ஏற்பாடு செய்த மனைவிகள்.. ஆந்திராவில் விநோத கல்யாணம்!
- தயாரிப்பு முறையில் பல்வேறு குளறுபடிகள் பக்கவிளைவுகளை உண்டாகும் உணவாக மாறுகிறதா பானிபூரி..?
- T20 World Cup: எங்களால் எந்த டீமையும் வீழ்த்த முடியும் – ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான்
- வங்கிக் கணக்கு இருந்தால் மட்டும் தான் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் ? பள்ளி கல்வித்துறை அதிரடி நடவடிக்கை
அதனை தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றது…. ஒரு நாள் முழுவதும் தாங்கள் படித்த பள்ளியில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் பழைய நினைவுகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டு இரவு பிரிந்து செல்ல மனமின்றி விடை நிகழ்வு அனைவரையும் கண்கலங்க வைத்தது. இருந்தாலும் தாங்கள் படித்த பள்ளியின் நூற்றாண்டு விழாவை நன்றி மறவாது மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாக கொண்டாடிய கிராம மக்கள் மற்றும் முன்னாள் மாணவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இச்சம்பவம் அங்குள்ள மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.