Home Stories Photos Videos Join
TRENDS
நடிகை கீர்த்தி பாண்டியனின் கிளாமர் ஸ்டில்ஸ்
ஸ்ரீலீலா அசத்தல் கிளிக்ஸ்
ஹைதராபாத் பெண் தொழிலதிபருடைய ரோல்ஸ்-ராய்ஸ் கார்!
வளர்ந்து வரும் கேரளா தொழிலதிபருடைய புது போர்ஷே கார்!
உலகின் பணக்கார பெண் ஃபிரான்ஷுவா பெட்டன் கோர்ட் னுடைய சொத்தின் மதிப்பு !

நாகையில் எட்டு கி.மீ நடைபெற்ற மாரத்தான் விழிப்புணர்வு ஓட்ட போட்டி

8km marathon awareness run at Nagai : நெகிழி இல்லா கடற்கரை மண்டலமாக உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாகையில் எட்டு கி.மீ நடைபெற்ற மாரத்தான்…

8km marathon awareness run at Nagai : நெகிழி இல்லா கடற்கரை மண்டலமாக உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாகையில் எட்டு கி.மீ நடைபெற்ற மாரத்தான் விழிப்புணர்வு ஓட்ட போட்டியில் 4000 க்கும் மேற்பட்ட விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் மாணவ மாணவிகள் ஆர்வலர்கள் பங்கேற்பு.

8km marathon awareness run at Nagai
8km marathon awareness run at Nagai

நெகிழி இல்லா கடற்கரை மண்டலமாக உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 23/02/2024 ல் நாகையில் மாரத்தான் ஓட்ட பந்தய போட்டி நடைபெற்றது. அக்கரைப்பேட்டை மீனவ கிராமம் சார்பில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியினை, தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, கூடுதல் ஆட்சியர் ரஞ்சித்சிங், மாவட்ட வருவாய் அலுவலர் பேபி போன்றோர் கொடியசைத்து துவங்கி வைத்தனர்.

இதையும் படிங்க : அதிகப்படியான சளியை தடுக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!

ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து துவங்கிய மாரத்தான் போட்டியில் ஆடவர் மற்றும் மகளிர் என சுமார் 4000 மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர், எட்டு கிலோமீட்டர் தூரம் வரை நடைபெற்ற இப்போட்டியில் பள்ளி மாணவர்கள், மாணவிகள் தனித்தனியாகவும், கல்லூரி மாணவர்கள், மாணவிகள் தனித்தனியாகவும், விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சளைக்காமல் உற்சாகத்துடன் ஓடி வந்தனர்.

இதையும் படிங்க : மயிலாடுதுறையில் மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் சாலை மறியல்

போட்டியில் கலந்து கொண்ட வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் அவர்கள் ஊக்கப்படுத்தினார். மாரத்தான் போட்டியில் பங்கேற்றவர்களுக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசு பொருட்கள் மற்றும் சான்றிதழ், கேடயங்களை அக்கரைப்பேட்டை ஜீவரத்தினம் நற்பணி மன்றத்தினர் வழங்கி பாராட்டினர்‌.

புதியது

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.

இப்போதே படிக்க