ADMK district secretary Pavunraj Pukhazaram : மயிலாடுதுறையில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் அதிமுக சார்பில் நடைபெற்றது கூட்டத்திற்கு அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமை வகித்து பேசினார்.. அவர் பேசுகையில் தீண்டாமையை ஒழிக்க பெரியார் அண்ணா ஆகியோர் முயற்சி செய்தனர் ஆனால் அவர்களுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த கருணாநிதி தீண்டாமையை ஒழிக்க எந்த முயற்சியும் செய்யவில்லை எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் தான் இரட்டை குவளை முறையை தடுத்து தீண்டாமையை முற்றிலுமாக ஒழித்தார் என புகழாரம் சூட்டி பேசினார்.
ADMK district secretary Pavunraj Pukhazaram

தொடர்ந்து பேசிய அவர் திருப்பூரில் தொலைக்காட்சி நிருபர் சமூகவிரோதிகளால் வெட்டப்பட்ட விவகாரத்தை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ‘சிறப்பு நிகழ்ச்சி’ என குறிப்பிட்டுள்ளது வேதனையை ஏற்படுத்துகிறது என்றும் இதனால் தான் மு க ஸ்டாலினை பொம்மை முதல்வர் என எடப்பாடியார் குறிப்பிடுகிறார் என்று பேசினார்.
Read Also : சாதியை கூறி திட்டி தாக்கியதாக காவல் நிலைத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை
அதிமுக நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்ட கூட்டத்தின் முடிவில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது
உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.
இப்போதே படிக்க


